வணிகம்

திரும்பப் பெறப்படும் டைஜீன் ஜெல்!

கோவா ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட செரிமானம் மற்றும் வாயுக் கோளாறுகளுக்கான மருந்து டைஜீன் ஜெல்லை அப்போட் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

DIN

கோவா ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட செரிமானம் மற்றும் வாயுக் கோளாறுகளுக்கான மருந்து டைஜீன் ஜெல்லை அப்போட் நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

ஒரு சில வாடிக்கையாளர்களின் புகார்களைத் தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) விடுத்த எச்சரிக்கையால், செரிமானக் கோளாறுகளுக்கான மருந்தை அப்போட் மருந்து தயாரிப்பு நிறுவனம் தாமாக முன்வந்து திரும்பப் பெறுகிறது.

பொதுமக்கள் அளித்த புகாரில், ஆகஸ்ட் மாதம் வாங்கப்பட்ட இந்த மருந்து வெள்ளை நிறத்தில் மாறிவிட்டதாகவும், சுவை கசப்பாக இருப்பதாகவும், மிகக் கடுமையான மணம் வீசுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். உண்மையில் இந்த ஜெல் இனிப்பு சுவையுடன் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். 

கோவா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட செரிமானக் கோளாறுகளுக்கான டைஜீன் ஜெல் என்ற மருந்தை,  அப்போட் நிறுவனம் திரும்பப் பெறுவதாகவும், இதனை நோயாளிகள் யாரேனும் எடுத்துக்கொண்டிருந்தால் அதனை நிறுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டு, பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில், இந்த மருந்தானது பாதுகாப்பற்றது மற்றும் எதிர்மறை சிக்கல் ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த மருந்தை எடுத்துக் கொண்டிருந்தால், அவர்கள் பயப்பட வேண்டாம் என்றும், ஒரு வேளை, மிக நீண்ட நாள்களுக்கு இந்த மருந்தை உட்கொண்டிருந்தால் மட்டும் அவர்கள் மருத்துவர்களை நாடலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், டைஜீன் மாத்திரைகளை சாப்பிடுவது பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மொத்த விற்பனையாளர்களுக்கு டிசிஜிஐ வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், அப்போட் நிறுவனத்தின் கோவா தொழிற்சாலையில் உற்பத்தியான இந்த குறிப்பிட்ட மருந்தை விற்பனையிலிருந்து நீக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவர்களும், சுகாதாரத் துறையில் இருப்பவர்களும், மிகவும் கவனமாக மருந்துகளை பரிந்துரைக்குமாறும், எந்த மருந்தை ஒரு நோயாளி எடுத்துக்கொண்டாலும் அதனால் ஏற்படும் நேர்மறை சிக்கல்களை உடனுக்குடன் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தும்படி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த மருந்தை, நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, அடிவயிற்று வலி, வாயுத் தொல்லை போன்ற பல பிரச்னைகளுக்கு நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT