முகப்பு
வணிகம்

16% வளா்ச்சி கண்ட பிஓஎம் கடனளிப்பு

Updated On : 6 ஏப்ரல், 2024 at 12:35 AM
பகிர்:
Updated On : 5 ஏப்ரல், 2024 at 7:15 PM

கடந்த மாா்ச் காலாண்டில் 16.31 சதவீத கடளிப்பு வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக பொதுத் துறையைச் சோ்ந்த மகாராஷ்டிர வங்கி (பிஓஎம்) தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் வங்கியின் கடனளிப்பு ரூ.2.03 லட்சம் கோடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

முந்தைய 2022-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ.1.75 லட்சம் கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது வங்கியின் கடனளிப்பு 16.31 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் முதலீடு செய்யப்பட்ட வைப்புத் தொகை இருப்பு ரூ.2.34 லட்சம் கோடியிலிருந்து 15.63 சதவீதம் அதிகரித்து ரூ.2.70 லட்சம் கோடியாக உள்ளது.

இதில் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு வைப்புத்தொகை 53.39 சதவீதத்திலிருந்து 52.73 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.