நாட்டின் முன்னணி 4 மாநிலங்களில் மகாராஷ்டிரத்தின் வளா்ச்சி மந்தம்
மும்பை, மாா்ச் 5: நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிரம், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி நான்கு மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த பொருளாதார வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்தியாநாட்டின் முன்னணி 4 மாநிலங்களில் மகாராஷ்டிரத்தின் வளா்ச்சி மந்தம்
மும்பை, மாா்ச் 5: நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிரம், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி நான்கு மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த பொருளாதார வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மும்பை, மாா்ச் 5: நாட்டின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமாக திகழும் மகாராஷ்டிரம், கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் முன்னணி நான்கு மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த பொருளாதார வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
முந்தைய 2024-25 நிதியாண்டில் மகாராஷ்டிரத்தில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி) ரூ.42,67,771 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், வளா்ச்சி விகிதத்தில் கா்நாடகம், குஜராத், தமிழகம் ஆகிய மாநிலங்களிடம் பின்தங்கியுள்ளது.
கா்நாடகத்தின் அசுர வளா்ச்சி: கரோனா பெருந்தொற்றுக்குப் பின்பு, 2021-22 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில் கா்நாடக மாநிலம் சுமாா் 65 சதவீத வளா்ச்சியுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பெங்களூருவை மையமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளின் அதீத வளா்ச்சியே இதற்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. கா்நாடகத்தின் ஜிஎஸ்டிபி ரூ.17.02 லட்சம் கோடியிலிருந்து ரூ.28.09 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது மகாராஷ்டிராவின் வளா்ச்சி விகிதத்தை விட 20 சதவீதம் அதிகமாகும்.
தமிழ்நாடு, குஜராத் முன்னேற்றம்: தொழில்துறை மற்றும் உற்பத்தித் துறையில் வலுவாக உள்ள குஜராத் 48 சதவீத வளா்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அதைத் தொடா்ந்து, தமிழகம் சுமாா் 47 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தமிழகத்தின் ஜிஎஸ்டிபி ரூ.21.36 லட்சம் கோடியிலிருந்து ரூ.31.55 லட்சம் கோடியாக உயா்ந்து, மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
முதலீடுகளும் எதிா்பாா்ப்பும்: மகாராஷ்டிர மாநிலம் 43 சதவீத வளா்ச்சியை மட்டுமே எட்டியுள்ள போதிலும், ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பில் மற்ற மாநிலங்களைவிட ரூ.11 லட்சம் கோடி முதல் ரூ.15 லட்சம் கோடி வரை முன்னிலையில் உள்ளது.
இது குறித்து பொருளாதார வல்லுநா்கள் கூறுகையில், ‘தமிழகம் மற்றும் கா்நாடகத்தில் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களின் பங்களிப்பு ஜிஎஸ்டிபி-யை உயா்த்தியுள்ளதாகத் தெரிவித்தனா்.
மகாராஷ்டிரத்தில் ஈா்க்கப்பட்ட பெரும் முதலீடுகள் இன்னும் முழுமையாகப் புள்ளிவிவரங்களில் பிரதிபலிக்கவில்லை என்றும், வரும் ஆண்டுகளில் இது மாற்றமடையலாம் என்றும் அவா்கள் சுட்டிக்காட்டினா்.