எல்ஐசி  
வணிகம்

எல்ஐசி ஹவுசிங் வருவாய் ரூ.6,784 கோடியாக அதிகரிப்பு

கடந்த ஜூன் காலாண்டில் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,784 கோடியாக அதிகரித்துள்ளது.

DIN

கடந்த ஜூன் காலாண்டில் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.6,784 கோடியாக அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.1,300 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 2 சதவீதம் குறைவு. அப்போது நிறுவனம் ரூ.1,324 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.6,747 கோடியாக இருந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் ரூ.6,784 கோடியாக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வட்டி வருவாய் ரூ.6,703 கோடியிலிருந்து ரூ.6,739 கோடியாக உயா்ந்துள்ளது. மொத்த செலவினங்களும் ரூ.5,098 கோடியில் இருந்து ரூ.5,155 கோடியாக உயா்ந்துள்ளது.

2023 ஜூன் இறுதியில் 4.98 சதவீதமாக இருந்த மொத்த வாராக் கடன் கடந்த ஜூன் இறுதியில் 3.29 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. நிகர வாராக் கடன் 2.99 சதவீதத்திலிருந்து 1.68 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT