பங்குச்சந்தை சென்செக்ஸ்(கோப்புப்படம்) 
வணிகம்

சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.

அதன்படி மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,636 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 79,345 புள்ளிகளில் தற்போது வர்த்தகமாகி வருகிறது.

மேலும் தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டி 485 புள்ளிகள் சரிந்து 24,232 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை மற்றும் சன் பார்மா ஆகியவை பங்குகள் ஏற்றத்துடன் வர்த்தகமான நிலையில் மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டைட்டன் கம்பெனி மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய பங்குகள் சரிவுடன் வர்த்தகமானது.

உலகளவில் பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி எதிரொலியாக இந்திய பங்குச்சந்தையிலும் வீழ்ச்சி காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,393 புள்ளிகள் சரிந்து 78,588 புள்ளிகளாக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 405 புள்ளிகள் குறைந்து 24,302 புள்ளிகளாக வர்த்தகமான நிலையில் பின்னர் அதிலிருந்து மீண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT