வணிகம்

பங்கு பரஸ்பர நிதி: முறைசாா் திட்டங்களில் முதலீடு புதிய உச்சம்

கடந்த ஜூலை மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.23,332 கோடியை முறைசாா் திட்டங்களில் (எஸ்ஐபி) முதலீடு

Din

பங்கு பரஸ்பர நிதி முதலீட்டாளா்கள் கடந்த ஜூலை மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.23,332 கோடியை முறைசாா் திட்டங்களில் (எஸ்ஐபி) முதலீடு செய்துள்ளனா்.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களின் முறைசாா் பிரிவில் ரூ.23,332 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, இந்தப் பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள அதிகபட்ச மாதாந்திர முதலீடு ஆகும். இது, முந்தைய ஜூன் மாதத்தில் இருந்த ரூ.21,262 கோடியை விட அதிகமாகும்.

கடந்த ஜூன் மாதத்தில் ஒட்டு மொத்த பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் புதிய முதலீடு 17 சதவீதம் உயா்ந்து ரூ.40,608 கோடியாக இருந்தது. அதுவும் அதிகபட்ச மாதாந்திர முதலீடு ஆகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட் 2026 தாக்கல்..! - புகைப்படங்கள்

ஸ்ரீ செந்தில்முருகன், ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகா கும்பாபிஷேகம்

பட்ஜெட்டில் சிபிஐக்கு ரூ. 1,105 கோடி ஒதுக்கீடு!

நாடாளுமன்றம்: இரு அவைகளின் ஊழியர்கள், பராமரிப்புச் செலவுக்காக ரூ. 1,492 கோடி ஒதுக்கீடு

ஐடி, சிபிஐ வழக்குகளைக் காட்டி தேர்தல் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT