சித்தரிக்கப்பட்டது | மும்பை பங்குச் சந்தை 
வணிகம்

மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வுடன் முடிவு!

வாரத்தின் இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் உயர்ந்து முடிந்தது.

DIN

மும்பை : அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தைகளில் பங்குகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில், இன்றைய வர்த்தகத்தில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வர்த்தகர்கள் தொடர்ந்து வாங்கியதால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆரம்ப நேர வர்த்தகத்தில் உயர்ந்து இருந்தது.

நேற்றைய வர்த்தக நேர சரிவிலிருந்து மீண்டு, டாப் 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் 1,098.02 புள்ளிகள் உயர்ந்து 79,984.24 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 270.35 புள்ளிகள் உயர்ந்து 24,387.35 புள்ளிகளாக இருந்தது.

இன்றைய வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், டெக் மஹிந்திரா, மஹிந்திரா & மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பவர் கிரிட், என்டிபிசி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில் கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் மாருதி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் மொத்தம் 2,780 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,658 பங்குகள் உயர்ந்தும், 1,028 பங்குகள் சரிந்தும், மாற்றமில்லாமல் 94 பங்குகள் வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ, சியோல், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் ஆகியவை உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (வியாழக்கிழமை) கணிசமான உயர்வுடன் முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (வியாழக்கிழமை) ரூ.2,626.73 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.14 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 79.27 டாலராக உயர்ந்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை 0.73 சதவிகிதம் குறைந்து 78,886.22 ஆக முடிந்தது. வர்த்தக நேர முடிவில் 0.84 சதவீதம் சரிந்து 78,798.94 புள்ளிகளாக இருந்தது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 0.74 சதவீதம் குறைந்து 24,117 புள்ளிகளாக முடிந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 0.89 சதவிகிதம் குறைந்து சரிந்து 24,079.70 புள்ளிகளாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஜிட்டல் அரெஸ்ட்: சிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?

உலகின் தலைசிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பிடித்த 3 குவாஹாட்டி பல்கலை. பேராசிரியா்கள்!

நேபாளத்தில் நிலச்சரிவு: உயிரிழப்பு 50-ஐ கடந்தது!

தமிழ்நாட்டின் சைபர் குற்றங்களுடன் தொடர்பு? தில்லியில் 24 சிம் பாக்ஸ்கள் பறிமுதல்

டார்ஜிலிங்கில் தொடர் நிலச்சரிவுகள்! உயிரிழப்பு 14 ஆக உயர்வு! | Landslide | Rain

SCROLL FOR NEXT