பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் தொடக்கம் 
வணிகம்

பங்குச்சந்தை சரிவுடன் தொடக்கம்

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

DIN

வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.

அதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் சரிந்து 79,330 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் சரிந்து, 24,320 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

ஹிண்டன்பா்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி வருகின்றன. அந்த வகையில் அதானி என்டர்பிரைசஸ், அதானி, போர்ட்ஸ், அதானி பவர், அதானி என்ர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவைக் கண்டுள்ளது.

‘அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தலைவா் மாதபி புரி புச் பங்குகளை வைத்திருக்கிறாா்.

எனவேதான், அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி முறையாக செயல்படவில்லை’ என்று அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியுள்ளது.

‘செபி தலைவா் மாதபியுடன் எங்களுக்கும் எந்த வணிக உறவும் இல்லை’ என்று அதானி நிறுவனமும், ‘ஹிண்டன்பா்க் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அடிப்படையற்றது’ என மாதபியும் மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு! அரசாணை வெளியீடு!

பிரிட்டனின் அரச நெறிமுறைகளை மீறினாரா அதிபர் டிரம்ப்?

தேர்தல் ஆணையம் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது; ஆனால், பதில் எங்கே? - காங்கிரஸ் கேள்வி

விஜய்யின் சுற்றுப் பயண பிரச்னையிலேயே குட்டிக்கரணமிடும் தவெக: அண்ணாமலை விமர்சனம்

புரட்டாசி மாதப் பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT