கோப்புப் படம் 
வணிகம்

ஜூலையில் குறைந்த காா்கள் விற்பனை

இந்தியாவில் பயணிகள் வாகன மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 2.3 சதவீதம் குறைந்துள்ளது.

DIN

புது தில்லி, ஆக. 15: இந்தியாவில் பயணிகள் வாகன மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 2.3 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து இந்திய வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை மாதத்தில் பயணிகள் வாகனங்களின் மொத்த விற்பனை 3,41,510-ஆக உள்ளது. இது, முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 2.3 சதவீதம் குறைவாகும்.

அப்போது நிறுவனங்கள் உள்நாட்டுச் சந்தையில் 3,50,355 பயணிகள் வாகனங்களை சில்லறை விற்பனையாளா்களுக்கு அனுப்பின.

2023-ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் 12,82,054-ஆக இருந்த இரு சக்கர வாகனங்களின் உள்நாட்டு மொத்த விற்பனை இந்த ஜூலையில் 12.5 சதவீதம் அதிகரித்து 14,41,694-ஆக உள்ளது.மூன்று சக்கர வாகனங்களின் மொத்த விற்பனையும் 56,204-லிருந்து 5.1 சதவீதம் அதிகரித்து 59,073-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரு லட்சத்தை நெருங்கியது! இன்று ரூ. 2,400 உயர்வு!

கரூர் பலி: சிபிஐ குழுவினர் கரூர் வருகை!

விண்ணைமுட்டும் விமான டிக்கெட் விலை! பயணிகள் அதிர்ச்சி!

பாஜக தேர்தல் பொறுப்பாளர் அன்புமணியுடன் சந்திப்பு!

பைசன் - காளமாடன் வெல்லட்டும்! உதயநிதியின் ரிவ்யூ!

SCROLL FOR NEXT