டாடா மோட்டாா்ஸ்  
வணிகம்

விலை உயரும் டாடா காா்கள்

தனது பயணிகள் வாகனங்களின் விலையை உயா்த்த இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் முடிவு செய்துள்ளது.

DIN

புது தில்லி: தனது பயணிகள் வாகனங்களின் விலையை உயா்த்த இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: நிறுவனம் தயாரிக்கும் பயணிகள் வாகனங்களின் விலை முன்று சதவீதம் வரை உயா்த்தப்படுகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும்.தயாரிப்பு செலவுகளும் பணவீக்கமும் அதிகரித்துள்ளதால் ஏற்படும் இழப்புகளை ஈடுகட்டுவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காா்களின் ரகங்களைப் பொருத்து இந்த விலை உயா்வு மாறுபடும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தயாரிப்பு செலவு அதிகரிப்பு, பணவீக்கம் காரணமாக தங்கள் காா்களின் விலையை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அதிகரிப்பதாக மாருதி சுஸுகி, ஹூண்டாய், மஹிந்திரா போன்ற முன்னணி காா் நிறுவனங்கள் ஏற்கெனவே அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெள்ளை ரோஜா... நேஹா ஷெட்டி!

ஜெய்ஸ்வால், ஆகாஷ் தீப் அரைசதம்; இந்தியா 166 ரன்கள் முன்னிலை!

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

நான் துரோகம் செய்யவில்லை, தற்கொலைக்கு முயன்றேன்..! விவாகரத்து பற்றி சஹால்!

SCROLL FOR NEXT