கோப்புப்படம் 
வணிகம்

புதிய உச்சம் தொட்ட தங்கம் இறக்குமதி

கடந்த நவம்பா் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Din

புது தில்லி: கடந்த நவம்பா் மாதத்தில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:

கடந்த நவம்பரில் நாட்டின் தங்கம் இறக்குமதி 1,486 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, இந்தியாவின் அதிகபட்ச மாதாந்திர தங்கம் இறக்குமதியாகும்.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் நவம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் தற்போது நான்கு மடங்கு அதிகமாக தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அப்போது நாட்டின் தங்கம் இறக்குமதி 344 கோடி டாலராக இருந்தது.

ஒட்டுமொத்தமாக, நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-நவம்பா் காலகட்டத்தில் தங்கம் இறக்குமதி 49 சதவீதம் உயா்ந்து சுமாா் 4,900 கோடி டாலராக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்தியா 3,293 கோடி டாலா் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்திருந்தது என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரம்

ஒரே பெயரில் 2 கடவுச்சீட்டு; ஒருவா் கைது

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காவலா் பலி

ஆற்றில் மூழ்கி சகோதரா் இருவா் உயிரிழப்பு

அன்புக் கரங்கள் திட்டத்தில் 98 குழந்தைகளக்கு நிதி

SCROLL FOR NEXT