இதுவரை இல்லாத சரிவில் ரூபாய் மதிப்பு!
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்து, ரூ. 85.81 காசுகளாக நிர்ணயம்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிந்து, ரூ. 85.81 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று 85.27 காசுகளாக இருந்த நிலையில், இன்று மேலும் சரிந்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு 9வது நாளாகச் சரிந்துள்ள நிலையில், இன்று மட்டும் 3% வரை மதிப்பு குறைந்துள்ளது. கடந்த இரு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு டிசம்பரில் ரூபாய் மதிப்பு மிகக் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
Advertisement
Advertisement
பங்குச் சந்தை வணிகம் ஏற்றத்துடன் தொடங்கினாலும், ரூபாய் மதிப்பு சரிவுடனேயே தொடங்கியது. இதனால் வங்கிகளுக்கு இடையிலான நாணய பரிமாற்றத்தில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பும் சரிந்து ரூ. 85.5 காசுகளாக வணிகமானது.
வணிக நேரத்தின் பிற்பாதியில் மேலும் சரிந்து ரூ. 85.81 காசுகளாக நிறைவு பெற்றது. இன்றைய வணிகத்தில் மொத்தமாக 23 காசுகள் சரிந்தது.
இதையும் படிக்க | சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு! ஆட்டோ, பார்மா துறை பங்குகள் ஏற்றம்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.