முகப்பு
வணிகம்

ரூபாய் மதிப்பு மேலும் 9 காசுகள் சரிவு! ரூ. 85.61

2024 - ன் இறுதி நாளான இன்றும் ரூபாய் மதிப்பு மேலும் 9 காசுகள் சரிந்து ரூ. 85.61 காசுகளாக வணிகம்.

Updated On : 31 டிசம்பர், 2024 at 6:51 AM
பகிர்:

2024 - ன் இறுதி நாளான இன்று (டிச. 31) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் 9 காசுகள் சரிந்து ரூ. 85.61 காசுகளாக வணிகமாகி வருகிறது.

நேற்றைய வணிக நேர முடிவில் 4 காசுகள் சரிந்து ரூ. 85.52 காசுகளான நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய வணிகத்தின் தொடக்கத்தில் 9 காசுகள் சரிந்துள்ளது.

இதனால், வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தில் இந்திய ரூபாய் 85.61 ஆக வணிகமாகிறது.

டிச. 27ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியைப் பதிவு செய்தது. தற்போது மேலும் சரிவைப் பதிவு செய்து வருகிறது.

உலகளவிலான டாலர் தேவை அதிகரிப்பும், இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து வெளியேறுவதும் ரூபாய் மதிப்பில் பிரதிபலிப்பதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதையும் படிக்க | சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை! சென்செக்ஸ் 0.5% சரிவு!

முழு கட்டுரையைப் படிக்க →