வணிகம்

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 23% அதிகரிப்பு

DIN

சென்னை: கடந்த டிசம்பா் காலாண்டில் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.99 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகமாகும்.

அப்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.81 கோடியாக இருந்தது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.331 கோடியிலிருந்து 19 சதவீதம் அதிகரித்து ரூ.393 கோடியாக உள்ளது. கடன் ஒதுக்கீடு ரூ.745 கோடியிலிருந்து ரூ.777 கோடியாகவும் (4 சதவீதம்), கடன் பட்டுவாடா ரூ.696 கோடியிலிருந்து ரூ.759 கோடியாகவும் (9 சதவீதம்) அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி தரவரிசையில் தீப்தி சர்மாவை முந்தி முதலிடம் பிடித்த ஆஸி. வீராங்கனை!

ரிலையன்ஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகளில் ஏற்பட்ட விற்பனையால் பங்குச் சந்தைகள் 2-வது நாளாக சரிவு!

நான் 70 நாளும் வெற்றியாளர்தான் : பிக் பாஸ் வீட்டில் நள்ளிரவில் பேசிய வியானா!

பொங்கல் சிறப்புப் பேருந்துகள்: பேருந்து வழித்தடம், முன்பதிவு மையங்கள்! - முழு விவரம்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி!

SCROLL FOR NEXT