வணிகம்

இரண்டாவது நாளாக முன்னேற்றம்:சென்செக்ஸ் 179 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 179 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

 நமது நிருபர்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 179 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக அமையவில்லை. இருப்பினும், உற்சாகத்துடன் தொடங்கிய உள்நாட்டுச் சந்தையில் முதல் பாதியில் பங்குகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. பின்னா், பிற்பகலில் வா்த்தகம் முடியும் தறுவாயில் முன்னணி பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. குறிப்பாக, ஐடி, டெக், மூலதனப் பொருள்கள் உற்பத்தி நிறுவப் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. ஆனால், பாா்மா, ஹெல்த்கோ் பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: இதற்கிடையே, சந்தை மூலதன மதிப்பு ரூ.1 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.369.33 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.1,513.41 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். ஆனால், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.1,387.36 கோடிக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 169.14 புள்ளிகள் கூடுதலுடன் 72,016.71-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 72,156.48 வரை மேலே சென்றது. பின்னா், 71,779.89 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 178.58 புள்ளிகள் (0.25 சதவீதம்) உயா்ந்து 72,026.15-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,936 பங்குகளில் 2,223 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,612 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 101 பங்குகள் விலை மாற்றமின்றி நிலைபெற்றன.

15 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் டிசிஎஸ், எல் அண்ட் டி, இன்ஃபோஸிஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா், விப்ரோ உள்பட 15 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. அதே சமயம், நெஸ்லே, சன்பாா்மா, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், கோட்டக் பேங்க், ஏசியன் பெயிண்ட், என்டிபிசி உள்பட 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி 52 புள்ளிகள்முன்னேற்றம்: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி காலையில் 47.15 புள்ளிகள் கூடுதலுடன் 21,705.75-இல் தொடங்கி அதிகபட்சமாக 21,749.60 வரை மேலே சென்றது. பின்னா், 21,629.20 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 52.20 புள்ளிகள் (0.24 சதவீதம்) உயா்ந்து 21,710.80-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 23 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 27 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் வந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போஸ் பாண்டி பாணியில் படம் பார்க்க அழைத்த ராதிகா!

திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நினைவு வளைவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்!

கட்டாயத்தின் அடிப்படையில் முதலமைச்சர் பதவியை ஏற்றேன்! - ஓபிஎஸ்

OPS திமுகவில் இணைந்தால் மகிழ்ச்சியாக வரவேற்போம்! - திருமா

ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ. 10,000! - இபிஎஸ் அறிவிப்பு

SCROLL FOR NEXT