முகப்பு
இந்தியா

கேரளம்: மதுபோதையில் பாம்பை பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞர்!

கேரளத்தில் மதுபோதையில் பாம்பை பேண்ட் பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞரால் பரபரப்பு நிலவியது.

Updated On : 25 ஏப்ரல், 2026 at 4:22 PM
பகிர்:

கேரளத்தில் மதுபோதையில் பாம்பை பேண்ட் பாக்கெட்டில் வைத்து டீ கடைக்குச் சென்ற இளைஞரால் பரபரப்பு நிலவியது.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டதில் உள்ள ஒத்தயி நகரில் புலம்பெயர் இளைஞர்(தொழிலாளி) ஒருவர் அண்மையில் டீ கடைக்குச் சென்றுள்ளார். அவர் அவ்வப்போது தனது கையை பேண்ட் பாக்கெட்டில் விட்டு, சட்டென்று வெளியே எடுத்து உதறி வந்திருக்கிறார். ஆரம்பத்தில் இதை யாரும் கவனிக்கவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகுதான், அங்கிருந்த உள்ளூர்வாசிகள் சிலர் அவர் பாக்கெட்டில் பாம்பு வைத்திருப்பதைக் கவனித்தனர்.

விசாரித்ததில், ​​அவரும் அதை ஒப்புக்கொண்டார். இதற்கிடையில், அவர் ஓரிரு முறை கடிக்கப்பட்டு, அந்தக் கடி காயங்களையும் காட்டினார். அங்கிருந்தவர்கள் பாக்கெட்டிலிருந்து பாம்பை வெளியே எடுக்கச் சொன்னதும், ​​அவரும் எடுத்தார். ஆனால் பாம்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. பின்னர், உள்ளூர்வாசிகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் அந்தப் பாம்பைக் கைவிட்டார்.

Advertisement

சிறிது நேரத்திற்குப் பிறகு பாம்பு இறந்துவிட்டது. பாம்பை ஒரு கவரில் வைத்து, உள்ளூர் மக்களே அந்த இளைஞனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து அவர் மஞ்ஜேரி மருத்துவக் கல்லூரிக்கு பரிந்துரைக்கப்பட்டார். அங்கு கண்காணிப்பில் உள்ள அந்த இளைஞருக்கு எந்த உடல்நலப் பிரச்னைகளும் இல்லை என்றும், அவரைக் கடித்தது விஷமற்ற பாம்பு என்றும் கூறப்படுகிறது.

சிகிச்சைக்குப் பிறகு அந்த இளைஞர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மது அருந்திய பிறகு அந்த இளைஞன் பாம்பைப் பிடித்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருக்கலாம் என்று உள்ளூர் மக்கள் சந்தேகிக்கின்றனர். இளைஞரின் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

summary

A youth who walked around with a snake in the pocket of his pants was bitten multiple times.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.