தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!
தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது தொடர்பாக...
கோவை வடக்கு, சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாக்குச் சாவடிகளில், தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்த அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் பிரியாணி வாங்கிக் கொடுத்து, திமுகவினர் உபசரித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, வடக்கு தொகுதிக்கு உள்பட்ட கணபதி அரசு மேல்நிலைப் பள்ளி, மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மேலும் பல வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை அனைவருக்கும் பிரியாணி உள்ளிட்ட பல்வேறு உணவு பரிமாறப்பட்டது.
தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் இரவும், தேர்தல் நாள் அன்றும் காலை, மதியம், இரவு நேரத்துக்கான உணவு மற்றும் காலை மற்றும் மாலை நேர சிற்றுண்டி ஆகியவற்றை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பரிமாறப்பட்டது.
Advertisement
Advertisement
இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்திருந்தனர். இதற்காக எந்தத் தொகையையும் அதிகாரிகளிடமும், பணியாளர்களிடமும் பெற்றுக் கொள்ளவில்லை.
இது குறித்து விசாரணையில் இறங்கிய வடக்கு தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
The act of DMK members treating officials and staff engaged in election duties at polling stations within the Coimbatore North Assembly constituency to biryani has sparked a controversy.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.