FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஜனநாயகன் வெளியான திரையரங்கில் சுடச்சுட பிரியாணி! அமைச்சர்கள் அமர்க்களம்!

ஜனநாயகன் வெளியான திரையரங்கில் ரசிகர்களுக்கு சுடச்சுட பிரியாணி பரிமாறிய அமைச்சர்கள்

Updated On : 23 ஜூலை 2026, 2:54 pm IST
ஜனநாயகன் - ani
பகிர்:

ஜனநாயகன் வெளியான திரையரங்கில் சுடச்சுட பிரியாணி! அமைச்சர்கள் அமர்க்களம்!

ஜனநாயன் திரைப்படத்தைக் காண வந்த ரசிகர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி வழங்கி தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.கே. தென்னரசு , ஆர்.வீ. ரஞ்சித்குமார் ஆகியோர் ரசிகர்களுக்கு அவர்களே பரிமாறினர்.

தமிழக முதல்வர் விஜய் ஜோசப் கடைசியாக நடித்த திரைப்படமான ஜனநாயகன் பல்வேறு பிரச்சினைகளைத் தாண்டி இன்று தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் வெளியானது.

Advertisement

Advertisement

விஜய் ரசிகர்கள் இதனை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேளம் தாளம், டிஜே நடனம் என ரசிகர்கள் திரையரங்கு முன்பு திரண்டு வந்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் பாபு சினிமாஸ் திரையரங்கில் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.கே. தென்னரசு மற்றும் ஆர்.வீ. ரஞ்சித்குமார் ஆகியோர் கட்சி நிர்வாகிகள் என பலரும் திரைப்படத்தைக் கண்டு ரசித்தனர்.

திரைப்படம் காண வரும் ரசிகர்கள் பசியாறும் வகையில், அமைச்சர் தென்னரசு ஏற்பாட்டின்பேரில் சிக்கன் பிரியாணி, லட்டு, ரைத்தா, கத்திரிக்காய் தொக்கு என உணவு வகைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திரைப்படம் பார்த்த ரசிகர்களுக்கு, அமைச்சர்கள் இருவரும் தங்கள் கைகளால் பிரியாணி பரிமாறினர்.

மேலும் வனத்துறை அமைச்சர் சார்பில் ரசிகர்களுக்கு சுற்றுச்சூழலை மேம்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் வகையில் மரக்கன்றுகளுக்கு வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments