வணிகம்

'எக்ஸ்' தளத்தில் ஆடியோ, விடியோ அழைப்பு வசதி: ஆனால்..!

எக்ஸ் தளத்தின் மூலம், ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் ஆடியோ மற்றும் விடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதி  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

DIN

டிவிட்டர் என்று அறியப்படும் எக்ஸ் தளத்தின் மூலம், ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் ஆடியோ மற்றும் விடியோ அழைப்புகளை மேற்கொள்ளும் புதிய வசதி  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இந்த ஆடியோ மற்றும் விடியோ அழைப்பை பிரீமியம் பயனர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பிரீமியம் பயனர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு அழைப்பு விடுக்க முடியும். மற்ற பயனர்கள் அழைப்பை பெற முடியுமே தவிர அழைப்பு விடுக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரீமியம் பயனர்களாக இருப்போர், எக்ஸ் செயலியை அப்டேட் செய்வதன் மூலம் இந்த சேவையை பெற முடியும். இதன் மூலம் எக்ஸ் தளத்தில் ப்ரீமியம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த வசதி வந்துவிட்ட நிலையில், தற்போது ஆண்டிராய்டு பயனர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 

இதன் மூலம், ஏற்கனவே முகநூல் மெசேஞ்சர், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவோர் விடியோ மற்றும் ஆடியோ அழைப்புகளை மேற்கொள்வதைப் போல, எக்ஸ் செயலி மூலமாகவும் அழைப்பை மேற்கொள்ள முடியும். விரைவில், அனைத்து வசதிகளையும் எக்ஸ் வலைத்தளம் பெறும் வகையில் அதனை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பைடர்மேன் உடையணிந்து பைக் சாகசம்! ரூ.15,000 அபராதம் விதித்த காவல் துறை!

வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளில் எந்த உண்மையும் இல்லை: அஜித் பவார்

கனிமொழிக்கு பெரியார் விருது: திமுக அறிவிப்பு

ஓய்வை அறிவித்தார் புஜாரா!

சில நேரங்களில் சினிமா என்பது... சௌபின் சாகிர் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT