கோப்புப் படம் 
வணிகம்

வரலாற்று சிறப்புமிக்க 80,000 புள்ளிகளை கடந்து சாதனை படைத்த சென்செக்ஸ்!

உறுதியான போக்கும், எஃப்ஐஐகளின் வரவு ஆகியவற்றால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதன் வாழ்நாள் உச்சத்தை எட்டியது.

DIN

உறுதியான உலகளாவிய போக்கும், வலுவான எஃப்ஐஐகளின் வரவு ஆகியவற்றால் இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் அதன் வாழ்நாள் உச்சத்தை எட்டியது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 62.87 புள்ளிகள் உயர்ந்து 80,049.67 புள்ளிகளை எட்டியது. நிஃப்டி 15.65 புள்ளிகள் உயர்ந்து 24,302.15 புள்ளிகளைத் தொட்டது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதே வேளையல் ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை சரிந்து முடிந்தது.

நேற்றைய வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் சுமார் ரூ.5,483.63 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கி உள்ளனர்.

ஆசிய சந்தைகளில் டோக்கியோ மற்றும் சியோல் இன்று ஏற்றத்திலும், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சரிந்தும் வர்த்தகமாயின. அமெரிக்க சந்தைகள் நேற்று (புதன்கிழமை) வர்த்தகத்தில் உயர்வுடன் முடிவடைந்தன. சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.60 சதவிகிதம் குறைந்து 86.82 அமெரிக்க டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சராகப் பதவியேற்ற முன்னாள் மத்திய அமைச்சரின் மகன்!

பிரதமர் மோடியின் காலில் விழ முயன்ற பிகார் முதல்வர்! - வைரல் விடியோ

“மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக”... பிகார் முதல்வராகப் பதவியேற்றப் பின் நிதீஷ்குமார்!

செமெரு எரிமலை வெடிப்பு! வீடுகளை இழந்த மக்கள்! | Indonesia

கர்நாடக முதல்வர் பதவியில் மாற்றம்? டி.கே. சிவக்குமாரின் ஆதரவு எம்எல்ஏக்கள் தில்லி பயணம்!

SCROLL FOR NEXT