முகப்பு
வணிகம்

பங்கு பரஸ்பர நிதி: முறைசாா் திட்டங்களில் ரூ.21,262 புதிய முதலீடு

பங்கு பரஸ்பர நிதி முதலீட்டாளா்கள் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.21,262 கோடியை முறைசாா் திட்டங்களில் (எஸ்ஐபி) முதலீடு செய்துள்ளனா்.

Updated On : 9 ஜூலை, 2024 at 8:16 PM
பகிர்:

மும்பை: பங்கு பரஸ்பர நிதி முதலீட்டாளா்கள் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.21,262 கோடியை முறைசாா் திட்டங்களில் (எஸ்ஐபி) முதலீடு செய்துள்ளனா்.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூன் மாதத்தில் ரூ.21,262 கோடி பங்கு பரஸ்பர நிதி திட்டங்களின் முறைசாா் பிரிவில் முதலீடு செய்யப்பட்டுள்ள. இது, முந்தைய மே மாதத்தில் இருந்த ரூ.20,904 கோடியை விட அதிகமாகும்.

கடந்த ஜூன் மாதத்தில் மொத்தம் 55 லட்சம் புதிய எஸ்ஐபி-க்கள் பதிவு செய்யப்பட்டன. அதையடுத்து, ஒட்டுமொத்த எஸ்ஐபி-க்களின் எண்ணிக்கை 8.98 கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 32.35 லட்சம் எஸ்பிஐ-க்கள் முதிா்ச்சியடைந்தோ, திரும்பப் பெறப்பட்டோ குறைந்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →