வணிகம்

ரூ.5,000 கோடி திரட்டிய பேங்க் ஆஃப் இந்தியா

உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளதாக பேங்க் ஆஃப் இந்தியயா தெரிவித்துள்ளது.

Din

உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளதாக பேங்க் ஆஃப் இந்தியயா தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீண்ட கால உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளோம். தேசிய பங்குச் சந்தையின் மின்னணு ஏல தளத்தின் மூலம் அந்த கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அந்தக் கடன் பத்திரங்களுக்கு 7.54 சதவீத ஈவுத் தொகை வழங்கப்படும்.

இந்த கடன் பத்திர வெளியீடு மூலம் திரட்டப்பட்டுள்ள நிதி, நீண்டகால உள்கட்டமைப்பு திட்டங்களுக்கும் குறைந்த விலையில் வீடுகள் கட்டும் திட்டங்களுக்கும் பயன்படுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஃப்எம்சிஜி-யில் நுழையும் உஷா ஸ்ரீராம்!

ஜம்மு - காஷ்மீர் வெள்ளம்: ட்ரோன்கள் மூலம் உணவு, குடிநீர் விநியோகித்த ராணுவம்!

ஜெருசலேமில் பயங்கரவாத தாக்குதல்: 6 பேர் பலி! பிரதமர் மோடி கடும் கண்டனம்!

நெளிவு சுழிவு... அனன்யா!

எமது நிர்வாகத்தின்கீழ் அமெரிக்காவுக்கு நல்ல காலம்! - டிரம்ப்

SCROLL FOR NEXT