90% வீழ்ச்சியடைந்த ஹெச்பிசிஎல் நிகர லாபம்
கடந்த ஜூன் காலாண்டில் அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) 90 சதவீத நிகர லாப வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
புது தில்லி: கடந்த ஜூன் காலாண்டில் அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) 90 சதவீத நிகர லாப வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 633.94 கோடியாகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் இது ரூ. 6,765.50 கோடியாக இருந்து. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 90 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நிதியாண்டில் தயாரிப்பு செலவு குறைந்தாலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படாமல் இருந்ததால் ஹெச்பிசிஎல் நிறுவனம் மிகப் பெரிய லாபம் ஈட்டியது. ஆனால் தோ்தலுக்கு முன் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டதால் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிகர லாபம் மிகவும் குறைந்துள்ளது.