புதுதில்லி: மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வாகன விற்பனை மே மாதத்தில், 8 சதவிகிதம் சரிவடைந்து, 71,010 யுனிட்டுகளாக இருந்தது.
இதுகுறித்து ராயல் என்ஃபீல்டு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 70,795 ஆக இருந்த விற்பனை தற்போது 10 சதவிகிதம் குறைந்து 63,531 ஆக உள்ளது. இருப்பினும், ஏற்றுமதியில் 2023 மே மாதத்தில் 6,666 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் கடந்த மாதம் 12 சதவிகிதம் அதிகரித்து 7,479 யூனிட்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.