முகப்பு
வணிகம்

புதிய உச்சத்தை பதிவு செய்த சென்செக்ஸ், நிஃப்டி!

சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தை எட்டியது: சில்லறை பணவீக்கம் குறைந்தது காரணம்

Updated On : 13 ஜூன், 2024 at 12:28 PM
கோப்புப் படம்
பகிர்:

மும்பை : மே மாதத்தில் சில்லறை பணவீக்கம் ஒரு வருட அளவு சரிந்ததைத் தொடர்ந்து, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் புதிய உச்சத்தை எட்டியது.

இன்றைய வர்த்தகத்தில் விப்ரோ, டெக் மஹிந்திரா, நெஸ்லே, டைட்டன், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், கோடக் மஹிந்திரா வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமானது. அதே நேரத்தில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் பவர் கிரிட் ஆகியவை சரிந்து முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 204.33 புள்ளிகள் உயர்ந்து 76,810.90 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீடான எண் நிஃப்டி ஆனது 75.95 புள்ளிகள் உயர்ந்து 23,398.90 புள்ளிகளில் முடிவடைந்தது.

இன்றைய முக்கிய குறியீடுகளில், எஃப்எம்சிஜி துறை சரிவை சந்தித்தது. இது 0.7 சதவிகிதம் குறைவாகும். இதனை தொடர்ந்து நிஃப்டி எனர்ஜி துறையும் இதில் இடம் பிடித்தது. மறுபுறம் நிஃப்டி ரியாலிட்டி, ஐடி மற்றும் பார்மா ஆகியவை 2 சதவிகிதம் உயர்ந்தது முடிந்தது. தொடர்ச்சியாக இரண்டாவது அமர்வாக மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் சிறப்பாக செயல்பட்டது.

ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் ஹாங்காங் உயர்ந்து வர்த்தகமான நிலையில், டோக்கியோ மற்றும் ஷாங்காய் சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் பெரும்பாலும் லாபத்துடன் முடிவடைந்தன.

நேற்று வெளியிடப்பட்ட தரவுகளின்படி, சில்லறை பணவீக்கம் மே மாதத்தில் ஒரு வருட குறைந்த அளவான 4.75 சதவிகிதத்தை எட்டியதையடுத்து பணவீக்கக் குறைப்பு குறித்த செயல்முறையில் இந்தியா மற்றும் அமெரிக்கா சரியான பாதையில் பயணிக்கின்றது என்றார். இதுவே சந்தையின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, குறிப்பாக வங்கிப் பங்குகளுக்கு இது சாதகமான செய்தி என்று ஜியோஜித் நிதி சேவைகளின் தலைமை நிபுணர் வி.கே.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.36 சதவிகிதம் குறைந்து 82.30 அமெரிக்க டாலராக உள்ளது. அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் ரூ.426.63 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →