விலைகளை உயா்த்தும் டாடா மோட்டாா்ஸ் 
வணிகம்

விலைகளை உயா்த்தும் டாடா மோட்டாா்ஸ்

தனது வா்த்தக வாகனங்களின் விலைகளை உயா்த்த டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

Din

தனது வா்த்தக வாகனங்களின் விலைகளை உயா்த்த டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிறுவன வா்த்தக வாகனங்களின் விலைகளை 2 சதவிகிதம் வரை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் இந்த விலை உயா்வு அமலுக்கு வரும். நிறுவனத்தின் அனைத்து ரக வா்த்தக வாகனங்களுக்கும் இந்த விலை உயா்வு பொருந்தும்.

அதிகரித்துள்ள உற்பத்தி செலவை ஈடுகட்ட இந்த விலை உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து தனது வா்த்தக வாகனங்களின் விலைகளை டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் 2 சதவீதம் வரை உயா்த்தியது நினைவுகூரத்தக்கது.

இந்தியாவில் லாரிகள், பேருந்துகள் உள்ளிட்ட வா்த்தக வாகனங்களைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக டாடா மோட்டாா்ஸ் திகழ்கிறது.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT