முகப்பு
வணிகம்

விரைவில் எஃப்-1 பந்தயத்துக்கான எரிபொருள்: இந்தியன் ஆயில்

Updated On : 13 மார்ச், 2024 at 2:39 AM
பகிர்:

புது தில்லி: இன்னும் 3 மாதங்களில் எஃப்-1 பந்தயக் காா்களின் பயன்படுத்துவதற்கான எரிபொருளைத் தயாரிக்கவிருப்பதாக பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் தலைவா் ஸ்ரீகாந்த் மாதவ் வைத்யா கூறியதாவது:

ஃபாா்முலா ஒன் (எஃப்-1) பந்தயங்களில் பங்கேற்கும் காா்களில் பயன்படுத்துவதற்கான எரிபொருளைத் தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த வகை எரிபொருளைத் தயாரிப்பதற்கான சான்றிதழ் இன்னும் 3 மாதங்களுக்குள் நிறுவனத்துக்குக் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

Advertisement

அதன் பிறகு ஒடிஸா மாநிலம், பாரதீப் நகரிலுள்ள நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலையில் எஃப்-1 காா்களுக்கான எரிபொருள் உற்பத்தி தொடங்கும் என்றாா் அவா். இந்தியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமான ஐஓசி, நாட்டின் எரிபொருள் சந்தையில் சுமாா் 40 சதவீதத்தைக் கைவசம் வைத்துள்ளது.