வணிகம்

சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை வணிகம்! 25 நிறுவன பங்குகள் வீழ்ச்சி!

ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி வங்கி - பங்குகள் உயர்வு.

Manivannan.S

இந்திய பங்குச்சந்தை வணிகம் 3வது வணிக நாளான இன்று சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 900 புள்ளிகள் வரையும், நிஃப்டி 300 புள்ளிகள் வரையும் சரிந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 906.07 புள்ளிகள் சரிந்து 72,761.89 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.23 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 338 புள்ளிகள் சரிந்து 21,997.70 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.51 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 5 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 25 நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்தன.

அதிகபட்சமாக பவர் கிரிட் நிறுவனத்தின் பங்குகள் 7.7 சதவிகிதம் சரிந்திருந்தது. என்டிபிசி 6.6 சதவிகிதமும், டாடா ஸ்டீல் 5.87 சதவிகிதமும், டாடா மோட்டார்ஸ் 4.28 சதவிகிதமும், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் 3.31 சதவிகிதமும் சரிவுடன் காணப்பட்டன.

ஐடிசி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், எச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT