முகப்பு
வணிகம்

வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை குறைத்த பேங்க் ஆஃப் இந்தியா

Updated On : 20 மார்ச், 2024 at 2:22 AM
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:10 PM

மும்பை: தாங்கள் வழங்கும் புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை பொதுத் துறை வங்கியான பாங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ) குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 8.45 சதவீதத்தில் இருந்து 8.30 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்தக் கடன்களுக்கு சிறப்பு சலுகையாக செயல்பாட்டு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். இந்தச் சலுகை இந்த மாதம் இறுதிவரை மட்டுமே அமலில் இருக்கும்.

Advertisement

நாட்டின் மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் 8.3 சதவீதம் என்பது மிகக் குறைந்த வீட்டுக் கடன் வட்டி விகிதமாகும். இந்தத் துறையில் முன்னணியில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கியும், ஹெச்டிஎஃப்சி வங்கியும் வாடிக்கையாளா்களிடம் வசூலிக்கும் குறைந்தபட்ச வீட்டுக் கடன் வட்டி விகிதம் 8.4 சதவீதமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.