கோப்புப் படம் 
வணிகம்

2வது நாளில் சரிந்த பங்குச்சந்தை வணிகம்!

பங்குச்சந்தை பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில், 7 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன.

DIN

வாரத்தின் 2வது வணிக நாளாக இன்று (மார்ச் 19) பங்குச்சந்தை வணிகம் சரிவுடன் முடிந்தது. பங்குச்சந்தை வணிகம் நேற்று ஏற்றத்துடன் முடிந்த நிலையில், இன்று சென்செக்ஸ், நிஃப்டி சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 736.38 புள்ளிகள் சரிந்து 72,012 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 1.01 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 238 புள்ளிகள் சரிந்து 21,817 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 1.08 சதவிகிதம் சரிவாகும்.

பங்குச்சந்தை பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில், 7 நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் இருந்தன. எஞ்சிய 23 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் காணப்பட்டன.

அதிகபட்சமாக டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, இந்தஸ்இந்த் வங்கி, விப்ரோ, எச்சிஎல் டெக், இன்ஃபோசிஸ், பவர் கிரிட், ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை தடாலடியாக குறைவு! இன்றைய நிலவரம்!

ஹமாஸ் பாணியில் ட்ரோன், ராக்கெட் தாக்குதல் நடத்த திட்டமிட்ட பயங்கரவாதிகள்!

எஸ்ஐஆர் படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டுமா? சிறப்பு முகாம் அறிவிப்பு!

நாகை பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா? ஆட்சியர் விளக்கம்!

தில்லி கார் வெடிப்பு: அல் ஃபலா பல்கலை. உள்பட 24 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

SCROLL FOR NEXT