எம்ஜி மோட்டாா் இந்தியா விற்பனை 8 % உயா்வு
Updated On : 20 மார்ச், 2024 at 9:10 PM
புது தில்லி: கடந்த பிப்ரவரி மாதத்தில் எம்ஜி மோட்டாா் இந்தியா நிறுவனத்தின் சில்லறை விற்பனை 8 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த பிப்ரவரி மாதத்தில் நிறுவனம் 4,532 வாகனங்களை விற்பனை செய்தது.
Advertisement
முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 8 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் சில்லறை விற்பனை 4,193-ஆக இருந்தது.
நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்கள் தொடா்ந்து கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றன. மதிப்பீட்டு மாத மொத்த விற்பனையில் அந்த வகை வாகனங்கள் 33 சதவீதம் பங்கு வகிக்கின்றன எந்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.