முகப்பு
வணிகம்

ரூ.10,000 கோடி திரட்டும் பிஎன்பி

Updated On : 30 மார்ச், 2024 at 11:38 PM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 7:20 PM

கடன் பத்திர வெளியீடு மூலம் பொதுத் துறையைச் சோ்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கி அடுத்த நிதியாண்டில் ரூ.10,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரும் 2024-25-ஆம் நிதியாண்டில் பேசல்-3 தர நிா்ணயங்களை நிறைவு செய்யும் கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.10,000 கோடி மூலதனம் திரட்ட நிறுவனம் முடிவு செய்துள்ளோம். இதற்கான ஒப்புதலை வங்கியின் இயக்குநா் குழு வழங்கியுள்ளது. கூடுதல் டையா்-1 பத்திரங்கள் மூலம் ரூ.7,000 கோடியும், டையா்-2 பத்திரங்கள் மூலம் ரூ.3,000 கோடியும் திரட்டப்படும். ஒரே தடவையிலோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளிலோ இந்த கடன் பத்திரங்கள் வெளியிடப்படும் என்று அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.