267 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்: சந்தையை வழிநடத்திச் சென்ற எஃப்எம்சிஜி பங்குகள்!
எஃப்எம்சிஜி பங்குகள் சென்செக்ஸை 267 புள்ளிகள் உயர்த்தியது!
நாட்டின் பங்குச்சந்தை குறியீட்டெண் வளர்ச்சி போக்கில் எஃப்எம்சிஜி பங்குகள் புதன்கிழமை முக்கிய பங்கு வகித்தன.
சென்செக்ஸ் 267 புள்ளிகள் உயர்ந்து 74,221 என்ற நிலையில் முடிந்தது. நிப்டி 68 புள்ளிகள் உயர்வில் 22,597 என்ற நிலையில் முடிந்தது.
புதன்கிழமை நிலவரப்படி மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் கலவையான போக்கில் காணப்பட்டன. நிப்டி மிட்கேப் 99 புள்ளிகள் உயர்விலும் நிப்டி ஸ்மால்கேப் 59 புள்ளிகள் குறைந்தும் முடிவுற்றன.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 21 பங்குகள் சிவப்பு நிறத்தில் முடிந்தன.
ஹெச்யுஎல், ஆர்ஐஎல், இன்போசிஸ், ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் ஐடிசி இலாபம் ஈட்டிய நிலையில் எஸ்பிஐ, ஜெஎஸ்டபிள்யூ ஸ்டீல், ஆக்சிஸ், ஐசிஐசிஐ, டாடா ஸ்டீல் மற்றும் டாடா மோட்டர்ஸ் பங்குகள் இழப்புக்குள்ளாகின.
துறை சார்ந்த குறியீட்டெண்ணில் எஃப்எம்சிஜி பங்குகள் அதிகம் இலாபம் ஈட்டிய நிலையில் இருந்தன. பார்மஸி, ஐடி, ரியல் எஸ்டேட், மீடியா மற்றும் எனர்ஜி பங்குகளும் வளர்ச்சியில் முடிவுற்றன.
ஆட்டோ, பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கி துறைகள் முதன்மையான இழப்புக்குள்ளாகின.
இந்த போக்கு தொடர்ந்தால் நிப்டி 22,800 வரை குறுகிய காலத்தில் உயரும் என கணிக்கப்படுகிறது. 22,600 ஆதார புள்ளியாக அமையும் எனவும் 22,500 என்ற அளவில் நிலை கொள்ளும் எனவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.