ஜூன் 24 முதல் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் அதானி போர்ட்ஸ்!
புதுதில்லி: அதானி குழும நிறுவனமான, அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எகனாமிக் ஸோன், வரும் ஜூன் 24 முதல் மும்பை பங்குச் சந்தை குறியீட்டில் பட்டியலிடப்படும். இது விப்ரோ லிமிடெட் நிறுவனத்துக்கு மாற்றாக பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் அண்ட் பி டவ் ஜோன்ஸ் இன்டெக்ஸ் மற்றும் மும்பை பங்குச் சந்தை (பி.எஸ்.இ.) ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான ஆசியா இன்டெக்ஸ் இந்த மாற்றங்களை அறிவித்துள்ளது. இது தவிர, டாடா குழும நிறுவனமான ட்ரெண்ட் லிமிடெட் சென்செக்ஸ் 50ல் நுழையும், அதே நேரத்தில் திவிஸ் லேபாரட்டரீஸ் லிமிடெட் குறியீட்டிலிருந்து நீக்கப்படும்.
இந்த மாற்றும் வரும் ஜூன் 24, 2024 திங்கள்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வகையில், மாற்றங்கள் செய்யப்படும் என்று ஆசியா இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.