முகப்பு
வணிகம்

சரிவுடன் முடிந்தது இன்றைய பங்குச் சந்தை வணிகம்!

தொடர்ந்து ஏறுமுகத்திலிருந்த இந்திய பங்குச் சந்தையானது, இன்றைய வர்த்தகத்தின் முடிவில் சரிவுடன் முடிவடைந்தது.

Updated On : 30 மே, 2024 at 12:17 PM
கோப்புப் படம்.
பகிர்:

மும்பை: தொடர்ந்து ஏறுமுகத்திலிருந்த இந்திய பங்குச் சந்தையானது, இன்றைய வர்த்தகத்தின் முடிவில் சரிவுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 617.30 புள்ளிகள் சரிந்து 73,885.60 என்கிற நிலையில் முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகியவை நிஃப்டியின் சரிவுக்கு அதிகம் பங்களித்தன. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் டாடா ஸ்டீல் நிறுவனம் அதன் நிகர லாபத்தில் சரிவை அறிவித்ததை அடுத்து, நிஃப்டி 50ல் மிகவும் இறங்கிய நிலையில் இருந்தது.

மாறாக, நிஃப்டி 50 பங்குகளில் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை 0.4 முதல் 1-1 சதவிகிதம் உயர்ந்தது. ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவை ஏற்றத்தில் வர்த்தகமாயின.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஹாங்காங் மற்றும் ஷாங்காய் ஆகியவை சரிவுடன் முடிவடைந்தது. அதே வேளையில் ஐரோப்பிய சந்தைகள் லாபத்துடன் வர்த்தகமாயின.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்றைய வர்த்தகத்தில் ரூ.5,841.84 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று உள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய்க்கு 0.41சதவிகிதம் குறைந்து 83.19 அமெரிக்க டாலராக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →