டாடா ஸ்டீல் நிகர லாபம் ரூ.759 கோடி!
டாடா ஸ்டீல் நிறுவனம், செப்டம்பர் 2024 காலாண்டில் நிகர லாபமாக ரூ.758.84 கோடி ஈட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
புதுதில்லி: டாடா ஸ்டீல் நிறுவனம், செப்டம்பர் 2024 காலாண்டில் நிகர லாபமாக ரூ.758.84 கோடி ஈட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளது.
கடந்த 2023-24 நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.6,511.16 கோடி நிகர இழப்பை சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.55,910.16 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.54,503.30 கோடியானது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க : அமெரிக்க அதிபராகிறார் டொனால்ட் டிரம்ப் - புகைப்படங்கள்
இந்த நிலையில் டாடா ஸ்டீல் தனது செலவினங்களை ரூ.55,853.35 கோடியிலிருந்து ரூ.52,331.58 கோடியாக குறைத்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் பங்கின் விலை ரூ.153.60-ஆக வர்த்தமான நிலையில் நிஃப்டியில் ரூ.153.66-ஆக வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.