பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 16% உயர்வு!
பால் தயாரிப்பு நிறுவனமான, பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் மாதம் காலாண்டில், 16 சதவிகிதம் அதிகரித்து ரூ.29.21 கோடி உள்ளது.
புதுதில்லி: பால் தயாரிப்பு நிறுவனமான, பராக் மில்க் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், செப்டம்பர் மாதம் காலாண்டில், 16 சதவிகிதம் அதிகரித்து ரூ.29.21 கோடி உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் இதன் நிகர லாபம் ரூ.25.19 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த வருமானம் ரூ.803.74 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.878.43 கோடியானது.
இதையும் படிக்க: முஃபின் கிரீன் நிகர லாபம் உயர்வு!
Advertisement
Advertisement
1992ல் நிறுவப்பட்ட பராக் மில்க் ஃபுட்ஸ் லிமிடெட் நாட்டின் முன்னணி பால் நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் உற்பத்தி ஆலைகள் மகாராஷ்டிராவின் மன்சார், ஆந்திரத்தின் பலமனேர் மற்றும் ஹரியானாவின் சோனிபட் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.