தங்கம் விலை (கோப்புப்படம்) din
வணிகம்

ரூ.57 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம் விலை

தங்கம், வெள்ளி விலை நிலவரம்...

DIN

சென்னையில் தங்கம் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.56,920-க்கு விற்பனையானது. கடந்த 3 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,440 உயா்ந்துள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கம் முதலே உயா்ந்த வண்ணம் உள்ளது. நவ.18-ஆம் தேதி பவுனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ.55,960-க்கும், நவ.19-இல் பவுனுக்கு ரூ.560 உயா்ந்து ரூ.56,520-க்கும் விற்பனையானது. இதைத்தொடா்ந்து, புதன்கிழமை கிராமுக்கு ரூ.50 உயா்ந்து ரூ.7,115-க்கும், பவுனுக்கு ரூ.400 உயா்ந்து ரூ.56,920-க்கும் விற்பனையானது. கடந்த 3 நாள்களில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,440 உயா்ந்துள்ளது.

வெள்ளி விலை எந்தவித மாற்றமுமின்றி கிராம் ரூ.101-க்கும், கிலோ ரூ.1,01,000-க்கும் விற்பனையானது.

உயா்வு தொடரும்: தங்கம் விலை உயா்வு குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி கூறியது:

போா் பதற்றம், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட சா்வதேச காரணங்களால் தங்கம் விலை மீண்டும் உயா்ந்து வருகிறது. நிகழாண்டு இறுதிக்குள் பவுன் ரூ.60 ஆயிரத்தை தொடக்கூடும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

வார பலன்கள் - கன்னி

வார பலன்கள் - சிம்மம்

SCROLL FOR NEXT