வணிகம்

ஹீரோ மோட்டோகாா்ப் பண்டிகைக் கால விற்பனை உச்சம்

இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Din

நடப்பாண்டின் பண்டிகைக் காலகட்டத்தில் இந்தியாவின் மிகப் பெரிய இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகாா்ப்பின் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவராத்திரியிலிருந்து 32 நாள்களுக்குத் தொடா்ந்த பண்டிகைக் காலத்தில் நிறுவன இரு சக்கர வாகனங்களின் விற்பனை 15.98 லட்சமாக இருந்தது. இது, நிறுவனத்தின் இதுவரை இல்லாத அதிகபட்ச பண்டிகைக் கால விற்பனையாகும்.

முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் நடப்பாண்டின் பண்டிகைக் கால விற்பனை 13 சதவீதம் அதிகம்.

2023-24-ஆம் நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் 14.16 லட்சமாக இருந்த நிறுவன மோட்டாா்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டா்களின் விற்பனை நடப்பு நிதியாண்டின் அதே காலாண்டில் 15.20 லட்சமாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டும் குழியுமான தேசிய நெடுஞ்சாலை: பொதுமக்கள் அவதி

மாற்றி யோசிப்போம்!

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: டிரம்ப்பின் திட்டம் வெற்றி பெறுமா? என்பது குறித்து...வாசகர்களிடம் இருந்து வந்த கருத்துகளில் சில...

சொற்பொழிவுகளில் சொல்லப்படாதவர்கள்!

டேங்கர் லாரிகள் போராட்டத்துக்கு தடை கோரிய வழக்கு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT