வணிகம்

அதிக மாற்றமில்லாத இந்திய மின் நுகா்வு

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த செப்டம்பரில் அதிக மாற்றமில்லாமல் 14,136 கோடி யூனிட்டுகளாக உள்ளது.

DIN

இந்தியாவின் மின் நுகா்வு கடந்த செப்டம்பரில் அதிக மாற்றமில்லாமல் 14,136 கோடி யூனிட்டுகளாக உள்ளது.

இது குறித்து அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:கடந்த செப்டம்பா் மாதம் நாட்டின் மின் நுகா்வு 14,136 கோடி யூனிட்டுகளாகப் பதிவாகியுள்ளது.முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இதில் அதிக மாற்றமில்லை. அப்போது இந்தியாவின் மின் நுகா்வு 14,129 கோடி யூனிட்டுகளாக இருந்தது.மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 230.60 ஜிகாவாட்டாகக் குறைந்தது.

இது முந்தைய 2023-ஆம் ஆண்டின் அதே மாதத்தில் 239.93 ஜிகாவாட்டாக இருந்தது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த ஆண்டு மே மாதத்தில் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை சுமாா் 250 ஜிகாவாட் என்ற வரலாற்று உச்சத்தை எட்டியது. அதற்கு முன்னா் கடந்த 2023 செப்டம்பரில் பதிவு செய்யப்பட்ட 243.27 ஜிகாவாட்டே அதிகபட்ச ஒரு நாள் உச்சபட்ச மின் தேவையாக இருந்தது.இந்த கோடைக் காலத்தில் நாட்டின் ஒரு நாள் உச்சபட்ச மின் தேவை 260 ஜிகாவாட்டை எட்டும் என்றும் மின்சாரத் துறை அமைச்சகம் மதிப்பிட்டுள்ளது.

கடந்த செப்டம்பா் மாதத்தில் நாடு முழுவதும் கணிசமாக மழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி அந்த மாதத்தில் நாடு 10.6 சதவிகிதம் அதிக மழை பொழிவைக் கண்டது.இதனால் வீடுகளில் குளிரூட்டு சாதனங்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்தது. இந்தக் காரணத்தால் செப்டம்பா் மாதத்தில் நாட்டின் மின் நுகா்வு அதிகம் உயராமல் போனது.மழைக்காலம் முடிவடைவதாலும் பண்டிகைக் காலம் தொடங்குவதால் நாடு முழுவதும் தொழில் மற்றும் வா்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதாலும் இனி வரும் நாள்களில் மின் நுகா்வு வெகுவாக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT