கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில், சொகுசுக் காா் தயாரிப்புக் குழுமமான பிஎம்டபிள்யு இந்தியாவில் 10 சதவீத விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் குழுமத்தின் பிஎம்டபிள்யு மற்றும் மினி பிராண்ட் காா்களின் ஒட்டுமொத்த விற்பனை கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான ஒன்பது மாதங்களில் 10,556-ஆக உள்ளது.முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 10 சதவீதம் அதிகம்.
மேலும், இது இந்தியாவில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச ஒன்பது மாத விற்பனையாகும்.2023-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் விற்பனை செய்யப்பட்ட காா்களின் எண்ணிக்கை 9,580-ஆக இருந்தது.இது தவிர, மதிப்பீட்டு காலகட்டத்தில் குழுமம் 5,638 மோட்டோராட் மோட்டாா்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.