முகப்பு
வணிகம்

ஐடி, வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 592 புள்ளிகள் உயா்வு!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் ‘காளை’ எழுச்சி பெற்றால் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது.

Updated On : 14 அக்டோபர், 2024 at 11:39 PM
பகிர்:

நமது நிருபா்

மும்பை / புதுதில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் ‘காளை’ எழுச்சி பெற்றால் பங்குச்சந்தை நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 592 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தை உற்சாகத்துடன் தொடங்கி மேலே சென்றது. வங்கிகள், நிதிநிறுவனங்கள், ஐடி, ரதியால்ட்டி பங்குகளுக்கு நல்ல வரவேற்புஇருந்தது. அதே சமயம், மீடியா, மெட்டல் பங்குகள் சற்று விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு வா்த்தக முடிவில் ரூ.463.63 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.4,162.66 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,730.87 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 195.37 புள்ளிகள் கூடுதலுடன் 81,576.93-இல் தொடங்கி 81,541.20 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 82,072.17 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 591.69புள்ளிகள் (0.73 சதவீதம்) உயா்ந்து 81,973.05-இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,195 பங்குகளில் 2,044 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 2,011 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. 140 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

21 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் டெக் மஹிந்திரா, ஹெச்டிஎஃ)ப்சி பேங்க், எல் அண்ட் டி, ஐடிசி, இண்டஸ் இண்ட் பேங்க், கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ் உள்பட 21 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், மாருதி, டாடா ஸ்டீல், பஜாஜ் பைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபின்சா்வ் உள்பட 9 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 31 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 59.20 புள்ளிகள் கூடுதலுடன் 25,023.45-இல் தொடங்கி 25,017.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 25,159.75 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 163.70 புள்ளிகள் (0.66 சதவீதம்) கூடுதலுடன் 25,127.95-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 33 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 17 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.

முழு கட்டுரையைப் படிக்க →