மும்பை பங்குச் சந்தை | கோப்புப் படம் 
வணிகம்

சரிவுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி; சில்லறை பணவீக்கம் அதிகரிப்பு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நஷ்டம் மற்றும் சில்லறை பணவீக்கம் ஒன்பது மாத உச்சத்தை எட்டியதையடுத்து, பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகள் இன்று சரிவுடன் முடிவடைந்தன.

DIN

மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நஷ்டம் மற்றும் சில்லறை பணவீக்கம், செப்டம்பர் மாதத்தில், ஒன்பது மாத உச்சத்தை எட்டியதையடுத்து, பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகள் இன்று சரிவுடன் முடிவடைந்தன.

காலை நேர வர்த்தக நேரத்தில் சென்செக்ஸ் 337.48 புள்ளிகள் சரிந்து 81,635.57 புள்ளிகளாக இருந்தது. இந்த நிலையில், மும்பை பங்குச் சந்தையின் முடிவில் குறியீட்டு எண் சென்செக்ஸ் 152.93 புள்ளிகள் குறைந்து 81,820.12 புள்ளிகளில் நிலைபெற்றது. அதே போல் தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 70.60 புள்ளிகள் குறைந்து 25,057.35 புள்ளிகளாக உள்ளது.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், டெக் மஹிந்திரா, டாடா மோட்டார்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி மாருதி உள்ளிட்ட பங்குகள் சரிந்து முடிந்து.

ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிந்தது.

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வணிகம் செயல்பாட்டு செயல்திறன் பாதித்ததால் நிகர லாபம் 5 சதவிகிதம் சரிந்தது என்று தெரிவித்துள்ளது.

இதையும் பார்க்க : லக்மே ஃபேஷன் வீக் 2024 - புகைப்படங்கள்

ஐடி சேவைகள் நிறுவனமான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ் 2025 நிதியாண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 10.51 சதவிகிதம் அதிகரித்து ரூ.4,235 கோடி என அறிவித்தது.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 4.71 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு 73.81 டாலராக உள்ளது.

ஆசிய சந்தைகளில், சியோல் மற்றும் டோக்கியோ உயர்ந்த நிலையில், ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சரிந்து முடிந்தது. ஐரோப்பிய சந்தைகள் ஏற்ற - இறக்கத்தில் முடிவடைந்த நிலையில் அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று (திங்கட்கிழமை) உயர்வுடன் முடிவடைந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.3,731.59 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இருப்பினும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.2,278.09 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 6

தில்லியில் லாலு பிரசாத் யாதவிற்கு கண் அறுவை சிகிச்சை

சூர்யா - 47... காவல்துறை அதிகாரிதானாம்!

நரை முடி நீங்க..!

அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT