மும்பை பங்குச் சந்தை  
வணிகம்

சென்செக்ஸ் 319 புள்ளிகளுடனும், நிஃப்டி 86.05 புள்ளிகளுடன் சரிந்து நிறைவுற்ற பங்குச் சந்தை!

சென்செக்ஸ் 318.76 புள்ளிகள் குறைந்து 81,501.36 புள்ளிகளாகவும், நிஃப்டி 86 புள்ளிகள் குறைந்து 24,971.30 புள்ளிகளாகவும் முடிந்தது.

DIN

இன்றைய வர்த்தகம் சரிந்து தொடங்கி ஏற்றம் கண்ட நிலையில், வர்த்தக முடிவில் மீண்டும் சரிந்து முடிந்தது.

மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் 240.74 புள்ளிகள் சரிந்து 81,579.37 ஆக இருந்தது. அதே வேளையில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 62.7 புள்ளிகள் சரிந்து 24,994.65-ல் இருந்தது. இதில் எரிசக்தி, ரியாலிட்டி தவிர ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறைகளை சரிந்தது கானப்பட்டது.

இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 318.76 புள்ளிகள் குறைந்து 81,501.36 புள்ளிகளாகவும், நிஃப்டி 86 புள்ளிகள் குறைந்து 24,971.30 புள்ளிகளாகவும் முடிந்தது. இதில் சுமார் 1935 பங்குகள் உயர்ந்தும், 1846 பங்குகள் சரிந்தும் மாற்றமில்லாமல் 105 வர்த்தகமானது.

நிஃப்டியில் டிரென்ட், மஹிந்திரா & மஹிந்திரா, ஹீரோ மோட்டோ கார்ப், இன்ஃபோசிஸ் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை சரிந்து முடிந்த நிலையில் எச்.டி.எஃப்.சி லைஃப், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், கிராசிம் இண்டஸ்ட்ரீஸ், பார்தி ஏர்டெல் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை உயர்ந்து முடிந்தது.

துறைகள் வாரியாக எண்ணெய் மற்றும் எரிவாயு, ரியாலிட்டி, தொலைத் தொடர்பு குறியீடுகள் உயர்ந்தும் ஆட்டோ, ஐடி, பார்மா மற்றும் மீடியா குறியீடுகள் தலா 0.5 முதல் 1 சதவிகிதம் வரை சரிந்தது.

பிஎஸ்இ மிட்கேப் பங்குகள் சமமாகவும், ஸ்மால்கேப் குறியீடு சுமார் 0.3 சதவிகிதம் வரை உயர்ந்து முடிந்தது.

ஆசிய சந்தைகளில் சியோல் மற்றும் டோக்கியோ சரிந்தும், அதே நேரத்தில் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் உயர்ந்தும் காட்டப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய எண்ணெய் அளவுகோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.23 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 74.42 டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிற்பயிற்சி மையத்தில் அக்கவுண்ட் ஆபீசர் பணி

நடிகர் மதன் பாப் உடல் தகனம்

“Button Phone போதும்!” எனக்கு போனில் பேசப் பிடிக்காது! கேப்டன் எம்.எஸ்.தோனி

தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்?

ருதுராஜ் வருகிறார், மினி ஏலத்தில் ஓட்டைகளை அடைப்போம்: எம்.எஸ்.தோனி

SCROLL FOR NEXT