டிவிஎஸ் மோட்டாா் கம்பெனி 
வணிகம்

டிவிஎஸ் மோட்டாா் நிகர லாபம் 42% அதிகரிப்பு

DIN

புது தில்லி : இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் நிகர லாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 41.4 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிகப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 41.4 சதவீதம் அதிகரித்து ரூ.588.13 கோடியாக உள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.415.93 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.9,932.82 கோடியிலிருந்து ரூ.11,301.68 கோடியாக உயா்ந்துள்ளது.ஜூலை-செப்டம்பா் காலாண்டில் நிறுவன இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் ஏற்றுமதி உள்ளிட்ட ஒட்டுமொத்த விற்பனை 10.74 லட்சத்திலிருந்து 14 சதவீதம் வளா்ச்சியடைந்து 12.28 லட்சமாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேவை இல்லை என்ற நிலையை உருவாக்கினால் மது ஒழிப்பு சாத்தியம் - சி. மகேந்திரன்

ஆம்பூரில் பலத்த மழை

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

SCROLL FOR NEXT