ஹூண்டாய் மோட்டார் புதிய S(O)+ வேரியண்ட் 
வணிகம்

ஹூண்டாய் மோட்டார் எக்ஸ்டர் போர்ட்ஃபோலியோவின் கீழ் 2 புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது பிரபலமான நுழைவு நிலை விளையாட்டு பயன்பாட்டு வாகனமான எக்ஸ்டெரில் 2 புதிய வகையான கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

DIN

சென்னை: ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது பிரபலமான நுழைவு நிலை விளையாட்டு பயன்பாட்டு வாகனமான எக்ஸ்டெரில் இரண்டு புதிய வேரியண்ட்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட S(O)+ வேரியண்டின் விலை ரூ.7,86,300 (எக்ஸ்-ஷோரூம்), அதே வேளையில் S+ ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்டின் விலை ரூ.8,43,900 (எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

புதிதாக சேர்க்கப்பட்ட வேரியண்ட்களில் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், கலர் டிஎஃப்டி மல்டி இன்ஃபர்மேஷன் டிஸ்ப்ளேவுடன் கூடிய டிஜிட்டல் கிளஸ்டர், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே உடன் 8 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள் ஆகியவை இதில் அடங்கும்.

புதிய எக்ஸ்டர் வேரியண்ட்டுகளில் 6 ஏர் பேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் 3 பாயிண்ட் சீட் பெல்ட்கள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை கடந்த ஆண்டு இதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட 71,435 யூனிட்டுகளுடன் ஒப்பிடுகையில் தற்போது 12 சதவிகிதம் சரிந்து 63,175-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT