கோப்புப்படம் 
வணிகம்

புணேவில் 16.4 ஏக்கர் நிலத்தை ரூ.520 கோடிக்கு வாங்கிய மைக்ரோசாஃப்ட்!

புணேவில் 16.4 ஏக்கர் நிலத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ.520 கோடிக்கு வாங்கியுள்ளதாக ரியல் எஸ்டேட் ஆலோசகரான ஸ்கொயர் யார்ட்ஸ் தெரிவித்துள்ளது.

DIN

புணேவில் 16.4 ஏக்கர் நிலத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் ரூ.520 கோடிக்கு வாங்கியுள்ளதாக ரியல் எஸ்டேட் ஆலோசனை வழங்கும் ஸ்கொயர் யார்ட்ஸ் தெரிவித்துள்ளது.

ஸ்கொயர் யார்ட்ஸ் மதிப்பாய்வு செய்த பதிவு ஆவணத்தின்படி, மைக்ரோசாஃப்டின் இந்திய பிரிவான மைக்ரோசாஃப்ட் கார்ப்பரேஷன் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், புணேவின் ஹிஞ்சேவாடியில் 66,414.5 சதுர மீட்டர் (சுமார் 16.4 ஏக்கர்) பிரதான நிலத்தை வாங்கியுள்ளது.

ஆகஸ்ட் 2024-ல் பதிவு செய்யப்பட்ட இந்த பரிவர்த்தனை, இந்தோ குளோபல் இன்ஃபோடெக் சிட்டி எல்.எல்.பி.யிடமிருந்து நிலம் வாங்கியதாக ஸ்கொயர் யார்ட்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு ரூ.31.18 கோடி முத்திரை வரி மற்றும் ரூ.30,000 பதிவு கட்டணம் செலுத்தப்பட்டது. அதே வேளையில் இந்த ஒப்பந்தம் குறித்து மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

2022-ல் மைக்ரோசாப்ட் நிறுவனம் பிம்ப்ரி-சின்ச்வாட்டில் 25 ஏக்கர் நிலத்தை ரூ.328 கோடிக்கு கையகப்படுத்தியது. அதேபோல் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஹைதராபாத்தில் 48 ஏக்கர் நிலத்தை ரூ.267 கோடிக்கு வாங்கியது.

இரண்டு ஒப்பந்தங்களும் மைக்ரோசாஃப்டின் இந்தியாவில் அதன் இருப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரே நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT