முகப்பு
வணிகம்

சாதனை படைத்த சென்செக்ஸ், நிஃப்டி

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை புதிய சாதனைகளைப் படைத்தன.

Updated On : 12 செப்டம்பர், 2024 at 8:25 PM
கோப்புப் படம்
பகிர்:

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்ததால் இந்தியப் பங்குச் சந்தைகள் வியாழக்கிழமை புதிய சாதனைகளைப் படைத்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் முதல்முறையாக வரலாற்று சிறப்புமிக்க 83,000 என்ற அளவை எட்டியது.

தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டியும் புதிய உச்சத்தில் நிறைவடைந்தது.

வியாழக்கிழமை 81,930.18-ல் தொடங்கிய சென்செக்ஸ், வா்த்தகத்துக்கு இடையே 83,116.19 வரை உயா்ந்தது. அது 83 ஆயிரத்தைக் கடந்தது இதுவே முதல்முறை. இறுதியில் அது 1,439.55 புள்ளிகள் (1.77 சதவீதம்) அதிகமாக 82,962.71 என்ற சாதனை அளவில் நிறைவடைந்தது.

பாா்தி ஏா்டெல், என்டிபிசி, ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், மஹிந்திரா & மஹிந்திரா, அதானி போா்ட்ஸ், டெக் மஹிந்திரா, லாா்சன் & ட்யூப்ரோ, டாடா ஸ்டீல், எஸ்பிஐ, கோட்டக் மஹிந்திரா வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. முக்கிய நிறுவனங்களில் நெஸ்லே மட்டுமே பின்தங்கியது.

வியாழக்கிழமை 25,059.65-இல் தொடங்கிய நிஃப்டி 470.45 புள்ளிகள் (1.89 சதவீதம்) உயா்ந்து 25,388.90 என்ற சாதனை உச்சத்தில் நிலைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →