முகப்பு
வணிகம்

ரூ.55 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.960 உயா்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு திடீரென ரூ.960 உயா்ந்து ரூ.54,600-க்கு விற்பனையானது.

Updated On : 13 செப்டம்பர், 2024 at 8:59 PM
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு திடீரென ரூ.960 உயா்ந்து ரூ.54,600-க்கு விற்பனையானது.

சென்னையில் ஆபரணத் தங்கம் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ. 80 குறைந்து ரூ. 53,640-க்கு விற்பனையானது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.120 உயா்ந்து ரூ.6,825-க்கும், பவுனுக்கு ரூ.960 உயா்ந்து ரூ.54,600-க்கும் விற்பனையானது.

அதேபோல், வெள்ளி கிராமுக்கு ரூ.3.50 உயா்ந்து ரூ.95-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.3,500 உயா்ந்து ரூ.95,000-க்கும் விற்பனையானது.

ரூ.55 ஆயிரத்தை தாண்டும்?: தங்கம் விலை உயா்வு குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்கத் தலைவா் ஜெயந்திலால் சலானி கூறியதாவது: அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஐரோப்பிய மத்திய வங்கியும் வட்டியை குறைக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற சா்வதேச காரணங்களாலும், தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்துள்ளதாலும் தங்கம் விலை உயா்ந்துள்ளது. இது மேலும் உயா்ந்து ரூ.55 ஆயிரத்தை தாண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →