முகப்பு
வணிகம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: ரூ. 68,000-ஐ கடந்தது!

தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி..

Updated On : 1 ஏப்ரல், 2025 at 10:16 AM
தங்கம் விலை (கோப்புப்படம்) - din
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 2) சவரனுக்கு ரூ. 480 உயர்ந்துள்ளது.

வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை காலை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400 என்ற புதிய உச்சத்தை தொட்டது. தொடர்ந்து நேற்று மாலையும் சவரனுக்கு ரூ. 200 விலை உயர்ந்து ரூ. 67,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சவரனுக்கு ரூ. 480 அதிரடியாக உயர்ந்து ரூ. 68,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ. 8,510.

Advertisement

வரலாற்றில் முதல்முறையாக தங்கத்தின் விலை ரூ. 68,000-ஐ கடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 1 உயர்ந்து ரூ. 113-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 1,13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கடந்து வந்த பாதை:

ஆண்டு விலை

(பவுன் - 8 கிராம்)

1950 -----------ரூ.79

1960 -----------ரூ.89

1970 -----------ரூ.147

1980 -----------ரூ.1,064

1990 -----------ரூ.2,560

2000 -----------ரூ.3,520

2010 -----------ரூ.14,800

2020 -----------ரூ.38,920

2025 (ஜன.22)----ரூ.60,200

2025 (பிப்.12)----ரூ.64,480

2025 (மாா்ச் 14)--ரூ.66,400

2025 (மாா்ச் 31)--ரூ.67,600

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.